கொரோனாவில் இருந்து முதல் நாடாக மீண்டது இஸ்ரேல் : முகக்கவசம் இல்லாமல் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் மக்கள்

ஜெருசலேம் : உலகையே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தடுப்பூசி மூலம் முதல் நாடாக இஸ்ரேல் மீண்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸின் 2ம் அலை  உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீள தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம், சமூக இடைவெளி, ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் கையாண்டு வரும் போதிலும், இன்னும் கொரோனாவை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தடுப்பூசி மூலம் முதல் நாடாக இஸ்ரேல் மீண்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகளை இஸ்ரேல் அரசு போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்து இதுவரை சுமார் 53 லட்சம் குடிமக்களுக்கு செலுத்திவிட்டது. அத்துடன் ஏற்கனவே கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி மீண்டு வந்த 8.5 லட்சம் பேருக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என்பதால் இஸ்ரேலில் சுமார் 68% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி ஆகிவிட்டது.

இதனால் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி பூங்கா, பேருந்து நிலையம் உள்ளிட்ட திறந்தவெளி பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் கிடையாது. இதனால் ஓராண்டுக்கு பிறகு இஸ்ரேல் மக்கள் முகக்கவசங்கள் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.

Related Stories:

More
>