×

கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்

மதுரை: தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடப்பதற்கு முன் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதால், கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நோட்டுகள் வழங்கப்படாததால், உற்பத்தி நிறுவனங்களில் பல ஆயிரம் நோட்டுகள் தேக்கமடைந்தன. வரும் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் சரியான நேரத்தில் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பேப்பர் மில்களில் நோட்டுகள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நோட்டு, புத்தகம் விற்பனை செய்யும் கண்ணன் கூறுகையில், ‘‘2019ம் ஆண்டு மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து நோட்டு, புத்தகங்கள், கைடு விலை 20 சதவீதம் வரை உயர்ந்து, விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக நோட்டு புத்தகங்கள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறந்தாலும் நோட்டு, புத்தகங்கள் உற்பத்தி செய்து வழங்குவதில் காலதாமதம் ஏற்படும். விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

Tags : Corona school , Corona, school, college, note, books
× RELATED கொரோனா பரவுவதால் தேவையின்றி...