×

கடவுளின் பூமியில் சாத்தான்கள் அட்டகாசம்; ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற வாலிபர்.... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

திருவனந்தபுரம், ஏப். 19: கேரளாவில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் காரில் நாயை கட்டி இழுத்து சென்று  கொடூரமாக காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதுபோன்ற  சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. மலப்புரம்  அருகே எடக்கரை பகுதியில்  நேற்று முன்தினம் 2 பேர் ஸ்கூட்டரில் ஒரு நாயை கட்டி  இழுத்து சென்றனர். அப்போது, நாய் தடுமாறி கீழே விழுந்தது. அதை கண்டு கொள்ளாமல், அந்த வாலிபர்கள் நாயை இழுத்து சென்றனர்.

இதனால், சாலையில் தேய்க்கப்பட்டதால் நாய் பலத்த   காயமடைந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர்  அந்த நபரை வழிமறித்தனர். ஆனால், அவர்  தொடர்ந்து நாயை இழுத்து சென்றார். சிறிது நேரத்தில் அப்பகுதியினர் திரண்டு அந்த நபரை மடக்கி பிடித்தனர். மேலும், எடக்கரை   போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் இருவரும்   நாயுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் எடக்கரை அருகே  கருநெச்சி பகுதியை சேர்ந்த  சேவியர் என தெரியவந்தது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவியரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும்  தகவல் கொடுக்கப்பட்டது.  அவர்களும் ேசவியர் வீட்டுக்கு விரைந்து சென்று, ரத்த காயங்களுடன் காணப்பட்ட  நாய்க்கு சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே, நாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்து ெசன்றதை  ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக  வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : God ,earth , God Earth, Youth, Social Website, Viral Video
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?