புகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: புகைப் பிடிப்பதை ஒழிக்க நியூசி லாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண் டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நியூசிலாந்து நாட்டில் 2025ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன், 2004ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கக்கூடாது என்று தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை நியூசிலாந்தை விட 240 மடங்கு அதிகம். இந்நிலையில், இந்தியாவில் இத்தகைய தடைகளை விதிப்பது தவிர்க்க முடியாதது. ஒரு குறிப்பிட்ட இலக்கு வைத்து அதற்குள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>