ஐபிஎல் டி20: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சென்னை: ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது. இதனால், ஐ.பி.எல். போட்டியின் இன்றைய 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories:

>