சோனு சூட், சுமித் வியாசை தொடர்ந்து 2 பாலிவுட் நடிகர்களுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர்கள் சோனு சூட், சுமித் வியாசை தொடர்ந்து நீல் நிதின் முகேஷ், அர்ஜுன் ராம்பால் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது வலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது வலை மகாராஷ்டிராவில் மோசமாக பாதித்துள்ளது. மும்பையில் நேற்று நான்கு பாலிவுட் நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்த வகையில், நீல் நிதின் முகேஷ், அர்ஜுன் ராம்பால், சுமித் வியாஸ் ஆகியோருக்கு முன்னதாக, சோனு சூட்டுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அர்ஜூன் ராம்பால் தனது டுவிட்டில், ‘கோவிட் -19 சோதனையில் எனக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இருந்தும் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ கவனிப்பில் உள்ளேன். கடந்த 10 நாட்களில் யார் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நீல் நிதினும் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும், தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

More
>