தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பொன்னேரியில் தீத்தொண்டு வார விழா

பொன்னேரி: தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், பொன்னேரி தீயணைப்பு நிலையத்தில் தீர்த்தார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறையில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தீயணைப்பு நிலையத்தில் நேற்று தீர்த்தார் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இது கடந்த 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.

தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், பொன்னேரி அடுத்த பரிக்கப்பட்டு கிராம பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பது, தீ விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories:

>