×

கொரோனா தொற்று அதிகரிப்பு: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டம்

கொழும்பு: கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என இலங்கையின் மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார். இவர்களில் 1,593- பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என கூறப்படுகிறது. தனிமைப்படுத்தலின் போது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு மாதத்தில் 3,480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

எனவேல இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் குறித்த மேலாண்மை திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Lankan ,Sri Lanka , Corona, Abroad, Sri Lanka, Restrictions, Government of Sri Lanka
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்