நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா

சென்னை: கொரோனா வைரஸ் 2வது அலையில் அதிக அளவிலான பாலிவுட் நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆமிர்கான், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கேத்ரினா கைப் உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். தற்போது சோனு சூட்டையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை. என் உடல்நிலை பற்றிய கூடுதலாக யோசிக்க நேரம் கிடைத்திருக்கிறது. எந்த பிரச்னை வந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப சோனு சூட் பெரிய அளவில் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>