பரமத்தி வேலூர், நத்தம் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பரமத்திவேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான மூர்த்தி எம்எல்ஏ, கடந்த சில நாட்களாக சளி-காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வந்தார். இதையடுத்து, கடந்த 15ம் தேதி கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதனால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் (72). நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். கடந்த 2 நாட்களுக்குமுன் அவர் வேம்பார்பட்டியிலிருந்து சென்னை சென்றார். அங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>