பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை தஞ்சை போலீஸ்காரர் சஸ்பெண்ட்

பாபநாசம்: அய்யம்பேட்டையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தஞ்சை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு பணிக்கு சென்றார். அப்போது அவருக்கு அதே காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்த அம்மன்பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (29) என்பவர் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு போலீஸ்காரர் முருகானந்தம் அந்த பெண் போலீசை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் போலீஸ் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி கடந்த 15ம் தேதி முருகானந்தத்தை கைது செய்தனர். இந்த நிலையில் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், போலீஸ்காரர் முருகானந்தத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>