×

நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கம் மின் மின்மயானத்தில் தகனம்: மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் புறப்பட்ட கலைஞன்..!

சென்னை: நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கம் மின் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்தார். இதனால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது ரத்த நாளத்தில் 100% எல்ஏடியில்  அடைப்பு உள்ளதை ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்து சரி செய்தனர். அந்த சிகிச்சை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. எக்மோ கருவி உதவியுடன் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

நேற்று மாலையில் நிருபர்களை சந்தித்த டாக்டர்கள், 24 மணி நேரம் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். அதற்கு பின்னர்தான் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும். அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் நேற்று முன்தினம் அவர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டார். இந்த தடுப்பு மருந்துக்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை. உடல்நிலையை அவர் கவனிக்காமல் இருந்துள்ளார் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்தார். பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல்  கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி செலுத்தினர்.

விவேக்கின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து காவல் துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது ஏராளாமானோர் பங்கேற்றனர். இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச்சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. பின்னர் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே காவல்துறை சார்பில் விவேக் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கவுரவிக்க காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Tags : Vivek ,Chennai ,earth , The artist who left earth and ascended to heaven
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...