அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு கொரோனா தொற்று

நத்தம்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் (72). இவர் சட்டமன்ற தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று முன் தினம் வேம்பார்பட்டியிலிருந்து சென்னை சென்றார்.

அங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனையில் நத்தம் விசுவநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவி செல்வராணி மற்றும் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>