×

விவேக் மறைவை என்னால் நம்ப முடியவில்லை; துக்கம் தொண்டையை அடைகிறது!: நெருக்கமான நண்பனை இழந்துவிட்டதாக வடிவேலு கண்ணீர்மல்க இரங்கல்..!!

மதுரை: நடிகர் விவேக்கின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் என நடிகர் வடிவேலு கண்ணீர்மல்க இரங்கல் தெரித்துள்ளார். விவேக் மறைவை என்னால் நம்ப முடியவில்லை; துக்கம் தொண்டையை அடைகிறது என்று வடிவேலு குறிப்பிட்டுள்ளார். நெருக்கமான நண்பனை இழந்துவிட்டேன். விவேக் மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார். நடிப்பு மட்டுமல்லாது, மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர் விவேக் என வடிவேலு உருக்கமாக தெரிவித்துள்ளார்.


Tags : Vivek ,Vizavelu , Vivek, grief, friend, Vadivelu, mourning
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...