×

பத்மஸ்ரீ, கலைவாணர் விவேக் மரணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி

சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் நடிகர் விவேக்
- தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்

நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக்
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக்
- திமுக தலைவர் ஸ்டாலின்

திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர், நடிகர் விவேக்
- துணை முதல்வர் பன்னீர்செல்வம்

தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர்
- பாமக நிறுவனர் ராமதாஸ்

நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது
- விசிக தலைவர் திருமாவளவன்

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக். நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர்.
- வைகோ

சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக’ உயர்ந்தவர் விவேக்
- ரவிக்குமார், எம்.பி

சமூக விழிப்புணர்வோடு பணியாற்றிய மகத்தான கலைஞர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
- வைகைச்செல்வன்

சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார். சனங்களின் கலைஞன் எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
- டிடிவி தினகரன்

சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்
- நடிகர் ரஜினிகாந்த்

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே, எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே
- கவிஞர் வைரமுத்து

செல் முருகனுக்கு தான் பெரிய இழப்பு, விவேக்குக்கு நிழலாக இருந்தவர்.
- ராதாரவி

நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும். நடிகர் விவேக் காமெடியன் கிடையாது. அவர் உண்மையான ஹீரோ.
- நடிகர் சூரி

தர்ம சிந்தனை உடையவர் நடிகர் விவேக்
- நடிகர் மயில்சாமி

சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக்
- இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு
- நடிகர் ராகவா லாரன்ஸ்

எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.
- இயக்குநர் சேரன்

சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக்கின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர்.
- இயக்குநர் பார்த்திபன்

நாங்கள் கஷ்டப்படும் காலத்தில் இருந்து நெருக்கிய நண்பர்கள்.
- ரமேஷ் கண்ணா

நல்ல மனிதர் விவேக். விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்.
- நடிகர் யோகி பாபு

கலாம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர். வெறும் கருத்துகளை மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகவில்லை; அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் விவேக்.
- பொன்ராஜ்

நடிகர் விவேக்கின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றது.
- வருண் சக்கரவர்த்தி

சொர்கத்திற்கான உங்களது பயணம் இவ்வளவு விரைவாக ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
- நடிகர் மாதவன்

விவேக் சார் மரங்களை மட்டுமல்ல மக்கள் மனதிலும் நல்ல எண்ணங்களையும் விதைத்துள்ளார்.
- நடிகை இந்துஜா

உங்கள் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்;  Rest in peace Vivek sir
- அனிருத்

அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும்
- நடிகர் நாசர்

 Miss u sir.. உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு; வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை
- இயக்குநர் அட்லி

எண்ணங்கள் மற்றும் மரங்களை நட்டமைக்கு நன்றி.
- நடிகர் பிரகாஷ் ராஜ்

நடிகர் விவேக் நட்டு வைத்த மரங்களில் ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் அவரது ஆன்மா இளைப்பாறும்
- நடிகர் ஆனந்த்ராஜ்

Tags : Vivek , Padmasree, Artist, Vivek Death, Actors, Political Leaders, Tribute
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...