5 மாநில தேர்தல் வேட்டையில் 1,000 கோடி பணம், மதுபானம் பறிமுதல்

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், மேற்கு வங்கத்தை தவிர மற்ற 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் இன்று நடக்கும் 5ம் தேர்தலை தவிர, மேலும் 3 கட்ட தேர்தல்கள் மிச்சம் உள்ளன. இந்த தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் லஞ்சமாக கொடுக்கப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையம் அதிரடி வேட்டையை நடத்தியது.

இதில் சிக்கிய பணம், பொருட்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தேர்தல் பறக்கும் படையின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ‘அதிகாரிகள் நேற்று முன்தினம் வரை நடத்திய அதிரடி சோதனையில், 5 மாநிலங்களில் 1,000 கோடி மதிப்பிலான பணம், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2016ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்டதை விட,

4 மடங்கு அதிகமாகும்,’ என கூறப்பட்டுள்ளது.

பிரசாரத்தில் 3 மணி நேரம் குறைப்பு

மேற்கு வங்கத்தில் இன்று 5ம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. வழக்கமாக இரவு 10 மணி வரை நடத்தப்படும் பிரசாரத்தை, இரவு 7 மணியுடன் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தேர்தல் பிரசார நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், மீதி 5 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில், தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிக்கப்பட்டு வருகிறது. இதை 72 மணி நேரமாக தேர்தல் ஆணையம் நேற்று மாற்றியது. இதன்மூலம், தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே பிரசாரம் முடிவுக்கு வருகிறது. மேலும், பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது.

எந்த தேர்தலிலும் தமிழகம் முதலிடம்

கடந்த 2016ல் மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் 208.55 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, 446.28 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், எந்த தேர்தல் ஆனாலும் பணம், தங்கம் உள்ளிட்ட லஞ்சத்தை அளிப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

பிரசாரத்தில் 3 மணி நேரம் குறைப்பு

மேற்கு வங்கத்தில் இன்று 5ம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. வழக்கமாக இரவு 10 மணி வரை நடத்தப்படும் பிரசாரத்தை, இரவு 7 மணியுடன் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தேர்தல் பிரசார நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், மீதி 5 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளில், தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிக்கப்பட்டு வருகிறது. இதை 72 மணி நேரமாக தேர்தல் ஆணையம் நேற்று மாற்றியது. இதன்மூலம், தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே பிரசாரம் முடிவுக்கு வருகிறது. மேலும், பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது.

Related Stories:

>