45 தொகுதிகளில் வாக்குப்பதிவு: மே.வங்கத்தில் இன்று 5வது கட்ட தேர்தல்: வன்முறையை தடுக்க பலத்த பாதுகாப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று ஐந்தாவது கட்டமாக 45 சட்டப்பேரவை  தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, 4 கட்டங்களாக மொத்தம் 135 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 5வது கட்டமாக இன்று 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 4ம்  கட்ட தேர்தலின்போது வன்முறைகள் அரங்கேறின. கூச் பெகாரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உட்பட 5ம் பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, இன்றைய தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வன்முறைகள் இன்றி, அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக தேர்தல் ஆணையம் மொத்தம் 853 கம்பெனி மத்திய படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மொத்தம் 15,789 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>