×

அடித்தது தவறு என்று மன்னிப்பு கோரியதால் போலீஸ் எஸ்ஐ மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராதா

சென்னை: சந்தேகப்பட்டு அடித்தது தவறு என்று மன்னிப்பு கோரியதால் எனது எஸ்ஐ கணவர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டேன் என்று நடிகை ராதா தெரிவித்துள்ளார். சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக ராதா அறிமுகமானார்.  சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வரும் நடிகை ராதா கடந்த 14ம் தேதி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன் கணவர் திருவான்மியூர் காவல் நிலைய எஸ்ஐ வசந்த் ராஜ் மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், பின்னர் என் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து தகராறில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில், வடபழனி உதவி கமிஷனர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு நடிகை ராதா மற்றும் எஸ்ஐ வசந்த்ராஜிக்கு விருகம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த சம்மன்படி நடிகை ராதா மற்றும் எஸ்ஐ வசந்த்ராஜ் நேரில் ஆஜராக வில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவர் எஸ்ஐ வசந்த்ராஜ் மீது அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக கடிதம் எழுதி கொடுத்துவிட்டு புகாரை வாபஸ் பெற்று கொண்டு சென்றார்.
இது குறித்து நடிகை ராதா நிருபர்களிடம் கூறியதாவது: சாலிகிராமத்தில் எனது சொந்த வீட்டில்தான் வசித்து வருகிறேன். பெண் வழக்கறிஞர் மூலம் எஸ்ஐ வசந்த்ராஜ் எனக்கு அறிமுகமானார். பின்னர் என்னை காதலிப்பதாக கூறினார். தனியாக வசித்து வரும் எனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்று முடிவு செய்து அவரது காதலை ஏற்றுக்கொண்டேன்.  அதன் பிறகு வசந்த்ராஜ் எனது வீட்டில் எனக்கு தாலி கட்டி என்னுடன் குடும்பம் நடத்தி வந்தார். பிறகு வசந்த்ராஜ் அடையாறில் உள்ள இ சென்டருக்கு அழைத்து சென்று அவர் தான் எனது ஆதார் அட்டையில் கணவர் வசந்த்ராஜ் என்று பதிவு செய்தார். அதோடு இல்லாமல் வங்கி கணக்கிலும் எனது கணவர் வசந்த்ராஜ் என்று அவர் பதிவு செய்து கொடுத்தார்.

நான் 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கார் என்பதால் அதை விற்பனை செய்து விட்டு எனது பணத்தில்தான் நான் கார் வாங்கினேன். மற்றபடி வசந்த்ராஜ் கார் வாங்க பணம் எதுவும் கொடுக்கவில்லை. அவர் வாங்கிய காருக்கு நான்தான் ரூ.4.50 லட்சம் கொடுத்துள்ளேன். இதுதவிர அவசர தேவை என்று கூறி அடிக்கடி ரூ.30 ஆயிரம், 20 ஆயிரம் என பணம் வாங்கி உள்ளார். என்னை சந்தேகப்பட்டு அடித்ததால்தான் நான் வசந்த்ராஜ் மீது புகார் அளித்தேன். நான் கொடுத்த புகாரால் அவரது இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்பதால் எனது புகாரை திரும்ப பெற்று கொண்டேன்.


Tags : Radha ,SI , Actress Radha has withdrawn her complaint against the police SI after apologizing that the beating was wrong
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ