தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையிலும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகளில் 2 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு மே மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டது. கொரோனா காரணமாக, செய்முறைத் தேர்வுகள் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வில் அறிவியல் பாடப் பிரிவுகளை எடுத்து படிக்கும் சுமார் 2 லட்சம்  மாணவ- மாணவியர் ெசய்முறைத் தேர்வுகளில் பங்கேற்கின்றனர். சென்னையை பொறுத்தவரையில் முதல் கட்ட செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 152 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 ஆயிரத்து 763 பேர் பங்கேற்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு  வேறு தேதியில் தேர்வு:  பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியதை அடுத்து, சென்னை அசோக் நகர் பள்ளிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.  

அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடங்கியுள்ளது. வேதியியல் செய்முறைத் தேர்வில் ‘பிப்பெட்’ , தாவரவியல், உயிரியல் படிப்போர், ‘நுண்ணோக்கி கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கருவிகளை பயன்படுத்தாமல் குறைந்த அளவில் அறிவியல் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு முடிந்துவிடும். கொரோனா பாதிப்பு ஏதாவது மாணவ மாணவியருக்கு இருந்தால் அவர்களுக்கு வேறு ஒரு நாளில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும் என்றார்.

Related Stories:

>