நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி தடுப்பூசிக்கும், பாதிப்புக்கும் தொடர்பில்லை: கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை:நடிகர் விவேக் நேற்று முன்தினம் சென்னை, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் தடுப்பூசி திருவிழாவை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சுகாதாராத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு  நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: விவேக் தானாக முன்வந்து, வேக்சின் செலுத்திக் கொள்ள வருகிறேன். நாங்கள் வேக்சின் போட்டுக் கொண்டால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறி அவருடைய குழுவினருடன் வந்தார்.  

இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நேற்று வரை நம்மிடம் சிரித்து பேசி கொண்டு இருந்து நபர், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் தடுப்பூசி போட காரணமாக இருந்த நபர் விவேக். எனவே, தடுப்பூசி போட்டதற்கும் அவரது நோயிக்கும் சம்பந்தம் இல்லை. அவரது இதயத்தில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் அபாயகரமான நிலையில் இருப்பது உண்மை. தற்போது அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் அவர் கூட வந்த 6 பேருக்கு கோவேக்சின் போடப்பட்டுள்ளது. மேலும் வேக்சின் எதிர்வினை இருந்தால் 15-30 நிமிடங்களில் தெரிந்துவிடும். கார்டியாக் அடைப்பு என்பது ஒரே நாளில் வராது. கொரோனா சோதனையில் அவருக்கு ெநகட்டிவ் என்று தான் வந்துள்ளது. அதைப்போன்று சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் தொற்று இல்லை என்று தான் வந்துள்ளது.  

பின்னர் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்: நேற்று காலை 11 மணியளவில் சுயநினைவு இல்லாத நிலையில் தான் நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த நாளத்தில் 100% எல்ஏடியில் அடைப்பு உள்ளதை ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்து சரி செய்தனர். அந்த சிகிச்ைச சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். இன்னும் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் மறுபரிசோதனை செய்யப்படும். மேலும் வென்டிரிக்குலோர் சிபிலேஸ் இதயம் துடிப்பது நின்று விடும்பட்சத்தில் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் முற்றிலும் நின்று விடும். இது அவருக்கு முதல் தடவை இதய அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்து எக்மோ உதவியுடன் இருக்கிறார். அவருக்கு இதய அடைப்பு மட்டும் தான் வேறு எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினர்.

Related Stories:

>