×

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தை வெளியிட தடையில்லை!: ஜெ.தீபா மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தலைவி என்ற திரைப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள்,  இணையதள தொடர்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது படத்தை வெளியிடும் முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என ஜெ.தீபா தரப்பில் கோரப்பட்டது. ஆனால் இதனை ஏ.எல். விஜய் தரப்பு ஏற்க மறுத்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தலைவி, ஜெயா ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாக தடை விதிக்க முடியாது என கூறி தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தலைவி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் மற்றும் எம்.ஜி.ஆர்.ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.


Tags : Jayalalita ,J. Deepa ,Icourt , Jayalalithaa, Talaivi Film, J.Deepa, iCord
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு