×

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா கைது..!!

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின்  சகோதரி சர்மிளா கைதானார். தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிட்டியின் தலைவர் சந்திரசேகரராவின் அரசு வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதால் சுனில் நாயக் என்ற இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு நீதி கேட்டு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா, அம்மா ஓ.எஸ். ஜெயம்மாவும் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, 3 நாள் போராட்டத்திற்கு அனுமதி கோரிய நிலையில் ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கிய அரசு, சர்மிளாவை கைது செய்து காவலில் வைத்தது. அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சர்மிளாவின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். சர்மிளாவும், அவரது ஆதரவாளர்களும் அரசு வேலை வாய்ப்புகள் குறித்த அறிக்கையை வெளியிடக்கோரி போராடி வருகின்றனர். முன்னதாக போராட்டத்தின் போது தன்னை அப்புறப்படுத்தினாலும் போராட்டத்தை தொடருவேன் என சர்மிளா தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, சகல வசதிகளும் கொண்ட அரசுக்கு தலைமை தாங்குவோருக்கு வேலையில்லா இளைஞர்களின் கஷ்டங்கள் புரியாது.

என்னை இங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். இங்கிருந்து என்னை நீங்கள் வீட்டிற்கு கொண்டு போனாலும், மருத்துவமனைக்கு கொண்டு போனாலும் வேறு எங்கு கொண்டு போனாலும் பச்சை தண்ணி பல்லிலே படாமல் எனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என குறிப்பிட்டார். இதனிடையே போலீஸ் காவலில் இருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு விடுதலையான சர்மிளா இன்று காலை முதல் வீட்டில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் விரைவில் சர்மிளா கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Sharmila ,Andhra Pradesh ,Chief Minister ,Jaganmohan Reddy , Hunger strike, Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy, sister Sharmila, arrested
× RELATED ஆந்திர மாநில நலன்களை பாஜகவிடம் அடகு...