ரேஷன் கடையில் பிடிபட்ட நல்லபாம்பு: திருவில்லி.யில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் புதுத்தெரு பகுதியில் ரேஷன் கடை உள்ளது இந்த கடையில் அரிசி மூட்டையை நகர்த்தியபோது பாம்பு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேஷன் கடை ஊழியர்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரேஷன் கடையில் சாக்கு மூட்டைக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருவில்லிபுத்தூர் வாழைக்குளம் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் மூன்று குட்டிகளுடன் பெரிய பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories:

>