×

இரட்டை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நாகர்கோவில் ரயில்கள் பல மணி நேரம் தாமதம்

நாகர்கோவில், மார்ச் 26: நாகர்கோவில் – திருநெல்வேலி இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் நாங்குநேரி – மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதைக்காக அமைக்கப்பட்ட புதிய தண்டவாளத்தில் நேற்று முன்தினம் 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை நடைபெற்றது. இந்த சோதனை திருப்திகரமாக இருந்ததாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த மதுக்கூர் சவுத்ரி கூறினார். இதையொட்டி நேற்று முன்தினம், சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் தாமதம் ஆனது. குறிப்பாக நேற்று முன் தினம் மாலை 5.45க்கு, நாகர்கோவில் இருந்து செல்ல வேண்டிய கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சுமார் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு சென்றது. இடையில் வள்ளியூர், நாங்குநேரி இடையே தலா 2 மணி நேரத்துக்கு மேல் நிறுத்தப்பட்டு, நெல்லைக்கு 7.15க்கு செல்ல வேண்டிய இந்த ரயில், இரவு 10.50 க்கு தான் சென்றது. இதே போல் நேற்று முன் தினம் சென்னையில் இருந்து வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ், ரயில் இரவு 11 மணிக்கு தான் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. இதே போல் நேற்று காலை  சென்னையில் இருந்து வர வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து வர வேண்டிய பெங்களூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தன. இரட்ைட ரயில் பாதை பணிக்காக நாகர்கோவில் – திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்பட்ட ரயில்கள் நேற்று முதல் வழக்கம் போல் இயங்க தொடங்கின….

The post இரட்டை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நாகர்கோவில் ரயில்கள் பல மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?