பொன்னியம்மன் கோயில் திருவிழா: பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்

திருமயம்: அரிமளம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக் காவடி, அலகு காவடி எடுத்து வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஆயிங்குடி குருந்தங்குடி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் 8ம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சித்திரை முதல் நாளை கொண்டாடும் விதமாக அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம், வழிபாடு ஆராதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து ஆயங்குடி கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்தார் கோயிலில் வழிபாடு செய்த பக்தர்கள் அங்கிருந்து பால்குடம், பறவை காவடி, அலகு காவடி எடுத்தனர். பின்னர் ஆயிங்குடி, குருந்தங்குடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பொன்னியம்மன் கோயிலை வந்தடைந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

Related Stories:

>