விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் சீரியஸ்

விருதுநகர்: விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் சிவகாசியை சேர்ந்த தேசிங்குராஜா (70) என்பவருக்கு சொந்தமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். பிற்பகலில் சீனிவெடி தயாரித்த ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு வெடிகள் வெடித்தது. இதில், ஆனையூர் ஆதிலட்சுமி (35), முத்துமாரி (37), செந்தி (35), அய்யம்பட்டி சுந்தரபாண்டி (40) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து ஆலை உரிமையாளர் தேசிங்குராஜா, போர்மேன் தங்கேஸ்வரன், சூபர்வைசர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>