செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் மழையில் நனைந்து 6,000 நெல் மூட்டை சேதம்: சேற்றில் புரண்டு விவசாயி போராட்டம்

செஞ்சி : செஞ்சி மார்க்கெட் கமிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பெய்த மழையால்  6 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் செஞ்சி சுற்றியுள்ள பகுதியில் குறுவை பருவ நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மார்க்கெட் கமிட்டி, தனியார் நெல் மண்டி, நெல் கொள்முதல் நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. அப்போது பெய்த மழையால் 6 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.

விவசாயி போராட்டம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று உழவர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மழையால் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும். கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய குடோன்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது ஒரு விவசாயி, மழையால் ஏற்பட்டிருந்த சேற்றில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கோரிக்கை மனுவை ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமியிடம் விவசாயிகள் அளித்தனர்.

Related Stories:

>