வரும் 18ம் தேதி நடக்க இருந்த மருத்துவ முதுநிலை படிப்பு நீட் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக தாக்கி வருகிறது. இந்நிலையில், 2021க்கான மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் 18ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு தகுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால், நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இளம் மருத்துவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் 18ம் தேதி நடத்தப்பட இருந்த மருத்துவ முதுநிலை படிப்புக்காக நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வை நடத்துவதற்கான மறுதேதி, ஆலோசித்து அறிவிக்கப்படும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>