- சிவகங்கை
- தாமஸ் அமலநாதன்
- மாநில துணைத் தலைவர்
- ஆரோக்கியராஜ்
- மாவட்ட செயலாளர்
- முத்துப்பாண்டியன்
- சிவகங்கை மாவட்டம்
- ராசி
தாமஸ்அமலநாதன், மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தமிழரசி ரவிக்குமார், செந்தில்நாதன், மாங்குடி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக அரசே ஊதியம் உள்ளிட்ட பணிக்கால சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அப்பள்ளிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் வழங்கப்பட்டு வந்தன.ஆனால் தமிழ்நாடு அரசு கடந்த ஐந்து ஆண்டு காலமாக அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எனப் பாகுபாடு காட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் பலவற்றை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில்லை. அதேபோன்று ஒன்றிய அரசு கடந்த 16 ஆண்டுகளாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை இந்தக் கல்வி ஆண்டு முதல் எவ்விதக் காரணமும் இன்றி நிறுத்தியுள்ளது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நியமன ஒப்புதல் வழங்கப்படாததால் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சிறுபான்மை மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு மார்ச் 22 அன்று நடத்தப்பட்டது. இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சிறுபான்மை மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுடைய பிரச்னைகளுக்குத் துணை நிற்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் தொடர வேண்டும் எம்எல்ஏக்களிடம் கோரிக்கை appeared first on Dinakaran.