பல்வேறு முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் சென்னையில் மே 5ல் வணிகர் தின மாநாடு: அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி நடைபெற உள்ள வணிகர் தின மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளராக எஸ்.எ.ஷேக்முஹம்மது அலியை மாநில தலைவர் கொளத்தூர் ரவி நியமனம் செய்து அறிமுகம் செய்து செய்தார். மேலும் மே 5ம் தேதி 38 வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்  மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>