அந்தமான் விமானத்தில் செல்ல சென்னை விமான நிலையம் வந்த மாணவனுக்கு கொரோனா

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் கோ ஏர்வேஸ் விமானம் நேற்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அப்போது, அந்தமானை சேர்ந்த தமிழரசன் (24), இந்த விமானத்தில் பயணிக்க வந்தார். உயர்படிப்பு மாணவரான இவர்சென்னையில் தங்கியிருந்து படித்து வந்தார். விமான நிறுவன கவுன்டரில் அவருடைய மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கி பரிசோதித்தனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று இருந்தது. இதையடுத்து தமிழரசனுக்கு போர்டிங் பாஸ் கொடுக்காமல், அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை வேறு எங்கும் போகவிடாமல் தடுத்து நிறுத்தி விமானநிலைய சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர்.சுகாதாரத்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related Stories:

>