×

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், தேவத்தூர், ஜவ்வாதுபட்டி, மார்க்கம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் முருங்கை பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் முருங்கையை ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருவர். தற்போது மார்க்கெட்டில் முருங்கை வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த மாதங்களில் ஒரு கிலோ மரமுருங்கை ரூ.40க்கும், செடி முருங்கை ரூ.50க்கும், கரும்பு முருங்கை ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் ஒரு கிலோ மரமுருங்கை ரூ.10க்கும், செடி முருங்கை ரூ.16க்கும், கரும்பு முருங்கை ரூ.18க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கொண்டு வரப்படும் முருங்கை கேரளா, மும்பை, ஆந்திரா பகுதிகளுக்கு தினமும் அனுப்பப்பட்டு வருகிறது. முருங்கை விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்….

The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Othanchatram ,Ketaiyurambu ,Kallimanthiyam ,Devathur ,Javvadhupatti ,Markambatti ,Moringa ,Dinakaran ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...