கொரோனா தாக்கம் எதிரொலி: ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு: கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு சந்தைக்கு குறைந்த அளவு மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுசந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற சந்தையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது  பாதியாக குறைந்து காணப்பட்டது. மேலும் மாடுகளை வாங்குவதற்காக வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதால் மாட்டுசந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாட்டு சந்தை வியாபாரிகள் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் சந்தை நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து  மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. இதேபோல இ-பாஸ் உள்ளிட்ட காரணங்களால் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருவதும் தடைபட்டுள்ளது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பரவலாக பெய்து வருவதால் கால்நடை வளர்ப்போர் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதனால் மாடுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. வழக்கமாக 500 மாடுகள்  விற்பனைக்கு கொண்டுவரும் நிலையில், இந்தவாரம் எருமை 200, கன்றுக்குட்டி 100 மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. சந்தைக்கு வரும் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து தெர்மல் ஸ்கேன் செய்த பிறகு வியாபாரிகள் சந்தைக்குள்  அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறினர்.

Related Stories:

>