நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த விற்பனை சந்தையில் காய்கறி சில்லறை விற்பனை கடைகள் இடமாற்றம்

நெல்லை: நெல்லை நயினார்குளம் மொத்த காய்கறி விற்பனை சந்தையில் செயல்பட்டு வந்த சில்லறை விற்பனை கடைகள், கொரோனா பரவலை தடுப்பதற்காக இன்று முதல் வெளிப்புற சாலைக்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல், அதிவேகமாக பரவி வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடை வெளியை  கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது. 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரவிய பகுதிகள் 3 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக சீல் வைக்கப்படுகின்றன.  பொது இடங்களில் முக கவசம்  அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியில் உள்ள மொத்த காய்கறி விற்பனை சந்தையில் கடந்த வாரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்ெகாண்டனர். இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து  தினமும் 100க்கணக்கான கனரக லாரிகள் மூலம் காய்கனிகள், விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி ஏற்றிச் செல்லப்படுகின்றன. இங்கு தினமும் மாலை தொடங்கி அதிகாலை வரை மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி விற்பனை நடந்து  வருகிறது. அதிகளவு மக்கள் கூடும் இப்பகுதியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சில்லறை காய்கனி விற்பனை கடைகளை, வெளி இடத்திற்கு மாற்ற மாநகராட்சியினர் அறிவுறுத்தினர். இதன்படி இன்று(ஏப்.15) காலை முதல் சில்லறை  விற்பனை கடைகள் அனைத்தும் நயினார்குளம் மொத்த விற்பனை சந்ைதயின் வெளிப்புறம் உள்ள சாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சாலையோரம் வியாபாரம் நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>