×

நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ6,000வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிகள்: தமிழகத்தில் வாழும், நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6,000ல் இருந்து ரூ.15,000 இருந்தல் வேண்டும். வயது 31.01.2023 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச தகுதி : தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்பு மற்றும் முதலிடம், இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் : ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில் இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சாவதேச,தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மேலும் ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது ஒன்றிய அரசு மாநில அரசின்கீழ் ஓய்வூதியம் பெறுவேர் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. மேற்படி திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் 20.03.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.  கடைசி நாள் 19.04.2023 ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக அலைபேசி எண். 7401703459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்…

The post நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...