×

உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் : திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி 1993-ம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீர் வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும். நாம் அன்றாடம் செய்யும் சிறு,சிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழி வகுக்கும். உதாரணமாக, பல் துலக் கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம். இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடி யும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திரு க்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப் பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிர ம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகா மல் பார் த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும். எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமையாகும். இந்த நிலையில், திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை நகராட்சி மேலாளர் முத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், நகராட்சி துப்புரவு ஆய்வர்கள் .தங்கராமன் மற்றும் ரவிச்சந்திரன், நகராட்சி பரப்புரையாளர்கள் மற்றும் பொது சுகாதார பணியாளர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்….

The post உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World Water Day Awareness Rally ,Tiruvarur ,World Water Day ,Tiruvarur Municipal Office ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...