இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் A+ பிரிவில் கேப்டன் கோலி நீடிப்பு: பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் A+ பிரிவில் கேப்டன் கோலி நீடிக்கிறார். ஒப்பந்த பட்டியலின A+ பிரிவில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். A+ பிரிவில் இடம்பெற்றுள்ள 3 வீரர்களுக்கும் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, தவான், ராகுல், ஷமி, இஷாந்த், பந்த், ஹர்திக் இடம் பெற்றுள்ளனர். B பிரிவில் சஹா, உமேஷ்யாதவ், புவனேஸ்வர், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளனர். ஏ பிரிவினருக்கு ரூ.5 கோடி, பி பிரிவினருக்கு ரூ.3 கோடி, சி பிரிவினருக்கு ரூ.1 கோடி ஆண்டு வருமானம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Related Stories:

>