×

மாநகராட்சி மேயர் தகவல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தினம்

தஞ்சாவூர்: சாவூர் மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் மருத்துவத் துறை, பொது மருத்துவத்துறை, மாவட்ட காசநோய் மருத்துவத்துறை ஆகியவை இணைந்து உலக காசநோய் தின நிகழ்ச்சியை நடத்தின.தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவத்துறை பேராசிரியர்கள் சுந்தரராஜன், வெற்றிவேல், மருத்துவத்துறை பதிவாளர் மணிமாறன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசுகையில், காச நோய் சிகிச்சையில் மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்த இலக்கான 75 சதம் நோய் கண்டறிதல், 85 சதம் குணப்படுத்தலை அடைய, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை அனைத்து மருத்துவர்களும் செயல்படுத்தி, பிரதமரின் அறிவுறுத்தலின் படி 2025ம் ஆண்டுக்குள், காசநோயை தஞ்சை டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி, இந்தியாவை விட்டு ஒழிக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார். டெல்டா (திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்) மாவட்ட காசநோய் துணை இயக்குனர்கள் மருத்துவர் சாவித்திரி, மருத்துவர் மாதவி, மருத்துவர் புகழ் ஆகியோர் பங்கேற்று காசநோய் கண்டறிதல், காசநோய் எதிர்ப்பு மருந்துகள் அறிவிப்பு சட்டம் மற்றும் இணை நோயினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி பேசினர். நுரையீரல் பிரிவு துறைத் துலைவர் மருத்துவர் அன்பானந்தன் வரவேற்றார். நுரையீரல் பிரிவு உதவி பேராசிரியர் நடேஷ் நன்றி கூறினார். இதில் துணை நிலைய மருத்துவர் கௌதமன், நோய்க் குறியியல் துறைத் தலைவர் சாந்தி, அனைத்து துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள், பாரா மெடிக்கல் மாணவர்கள் கலந்து கொண்டனர்….

The post மாநகராட்சி மேயர் தகவல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் உலக காசநோய் தினம் appeared first on Dinakaran.

Tags : Corporation Mayor Information World Tuberculosis Day ,Thanjavur ,Medical ,College ,Pulmonary Medicine Department ,General Medicine Department ,District Tuberculosis Medical Department ,Savoor Medical College for World Tuberculosis ,Thanjavur Medical College ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...