சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னை: சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருந்து வரும் பெயரை திடீரென மாற்றம் செய்திருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சின்னமலை - சிம்சன் வரை மவுண்ட் ரோடு என்று அழைக்கப்பட்ட சாலைக்கு அண்ணா சாலை என்று கலைஞர் பெயர் சூட்டினார். பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்த போதும் தமிழக அரசு மவுனம் காப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். கடற்கரை சாலைக்கும் காமராஜர் பெயரையும், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் பெயரையும் சூட்டினார் கலைஞர். மாமல்லபுரம் சாலைக்கும் பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி கூறியுள்ளார். அண்ணா, பெரியார், காமராஜர் சாலை என்று அழைக்கப்பட்ட பெயர்கள் தற்போது கைவிடப்பட்டு இருப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யாருடைய தூண்டுதலின் பெயரில் தமிழக அரசு பெயர் மாற்றம் செய்கிறது? என்று ஆர்.எஸ்.பாரதி வினவியுள்ளார்.

Related Stories: