விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: ஆர்சிபி கேப்டன்  விராட் கோலி நேற்று 33 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால்  விரக்தியில் வெளியேறிய அவர், பவுண்டரி லைனில் இருந்த விளம்பர மெத்தை,  மற்றும் சேரை பேட்டால் அடித்து தள்ளினார். இதனால் அவர் மீது லெவல் 1 விதிமுறை 2.2ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது கிரிக்கெட்  உபகரணங்கள் அல்லது உடைகள், பொருத்துதல்கள் ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வது  தொடர்பானது. நடத்தை விதிகளை மீறியதைத் தொடர்ந்து கோலி போட்டி நடுவர் வெங்கல் நாராயண் குட்டியால் கண்டிக்கப்பட்டார்.

Related Stories:

>