×

ஆலங்குடி அருகே இருதரப்பு மோதலில் 15 பேர் மீது வழக்கு

ஆலங்குடி: ஆலங்குடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி அருகே புலவன்காடு பிடாரியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா கடந்த மார்ச் 22ம்தேதி நடைபெற்றது. அப்போது திடீரென இருதரப்பை சேர்ந்த இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில் அன்று இரவு ஒருதரப்பை சேர்ந்த நபர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், அந்த நபரின் தங்கை, தாயாரை தாக்கி வாலிபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை சம்பட்டிவிடுதி போலீசார் கைது செய்து ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ஆலங்குடி அருகே இருதரப்பு மோதலில் 15 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Alangudi ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை, ஆலங்குடி கிராமங்களில்...