மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைவுதான்: கொரோனா 2ம் அலை கையை மீறி செல்லவில்லை: சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.!!!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி  ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று வழக்கமான விசாரணை தொடங்கியபோது, வேறொரு  வழக்கில் ஆஜராகி இருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனிடம், 2வது அலை  வேகமாக பரவி வருகிறது.

நீதிமன்றங்களில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிவுரைகள்  ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை  வழக்கறிஞர், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், குறிப்பாக  தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2ம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும்,  இந்த 2ம் அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ  நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், தமிழகத்தில்  போதுமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் கொரோனா  தொற்று மிக தீவிரமாக பரவி வரக்கூடிய நிலையில், தமிழக அரசின் விளக்கம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியுடன் ஆலோசனை  நடத்தியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை நிறுவனங்கள், மக்கள் கூடும் இடங்களில் மேலும்  கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து நாளை ஆலோசனை செய்யப்படும் என்றார். வீட்டிலிருந்து பணி செய்ய வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம். கொரோனா  தடுப்பூசி செலுத்திக்கொணடவர்கள் கபசுர குடிநீர் அருந்தலாம் என்றார். மூடப்பட்ட கொரோனா  சிகிச்சை மையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி  செலுத்திக்கொணடவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைவாகவே  இருக்கும். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 19,422  படுக்கைளும், மாநில அளவில் 83,376 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

Related Stories:

>