×

தினமும் மாலையில் படியுங்கள் அரசு சாதனை விளக்க கண்காட்சி தாந்தோணிமலை பிரதான சாலையில் விபத்து தடுக்க பேரிக்கார்டு வைக்க வேண்டும்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் தாந்தோணிமலை பிரதான சாலையில் வஉசி தெரு பிரியும் சாலையில் வாகனங்களின் அதிக வேகம் காரணமாக ஒரே வாரத்தில் இரண்டு பேர் விபத்தில் இறந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த வஉசி தெரு பிரிவு அருகே பேரிக்கார்டு வைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் இருந்து தாந்தோணிமலை வரை சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கரூரில் இருந்து திண்டுக்கல், தரகம்பட்டி, மணப்பாறை, திருச்சி பைபாஸ் சாலை, பாளையம், வெள்ளியணை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், தாந்தோணிமலையை மையப்படுத்தி செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த சாலையில் தினமும் நு£ற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.சாலையின் மையத்தில் தடுபபுச் சுவர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மில்கேட்டை தாண்டியதும் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால், சாலையில் வாகன போக்குவரத்து நடைபெறும் பகுதி மிகவும் குறுகலாகவே உள்ளது. இந்நிலையில், இந்த சாலையில், வஉசி தெருவுக்கு பிரியும் இடத்தில் கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் இறந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, இந்த சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் மிக மிக வேகத்தில் செல்வதால்தான் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, தாந்தோணிமலை சுங்ககேட் சாலையில் வஉசி தெரு பிரியும் பகுதியின் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஒருவர் இறந்தார். நேற்று இரவு, பைக்கில் சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.அதுமட்டுமின்றி, இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிக அதிக வேகத்தில் செல்வதுதான் விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி பகுதியில் மிக முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள இந்த சுங்ககேட் தாந்தோணிமலை வரையிலான சாலையில் வாகனங்கள் கட்டுப்பாட்டுடன் செல்ல தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு, வஉசி தெரு பிரிவு அருகே பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்கரம் முறிந்து நிற்கும் மாட்டு வண்டி…

The post தினமும் மாலையில் படியுங்கள் அரசு சாதனை விளக்க கண்காட்சி தாந்தோணிமலை பிரதான சாலையில் விபத்து தடுக்க பேரிக்கார்டு வைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Govt. Achievement Exhibition Exhibition ,Thanthonimalai ,Karur ,Sungaket Dandonimalai ,Karur Corporation ,Vausi Street ,Government Achievement Exhibition ,Dandonimalai ,Dinakaran ,
× RELATED தாந்தோணிமலை அரசு குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் நாடக மேடை