×

மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கட்லா கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர். 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் நேற்று காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். வழிபாட்டிற்கு பின் ஊர் முக்கியஸ்தர்களான செந்தில், வரதராஜன், சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் வெள்ளை வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த குளத்தில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர். பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கட்லா, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. கண்மாயில் தண்ணீர் மற்றும் மீன்கள் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் மீன்களை நடந்தது. பின்னர் கண்மாயில் மீன்கள் பிடித்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்கு சென்றனர்….

The post மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Fishing festival ,Chuliapatti pond ,Manaparai ,Manaparai, Trichy district ,Viral ,
× RELATED கொட்டாம்பட்டி அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா