×

கோத்தகிரியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாம்

கோத்தகிரி, மார்ச் 27: கோத்தகிரி மசகல், கூக்கல்தெரை பகுதியில் காட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதால் மலைகாய்கறிகள் விவசாயிகள், தேயிலை தோட்டங்களில் கவனமுடன் பணிக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை, மசகல் பகுதியை சுற்றிலும் பல குக்கிராமங்கள்  அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகப்படியான மலைகாய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது.இங்கு இரவு மற்றும் அதிகாலையில் கேரட், பீன்ஸ் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், அவரை போன்ற மலைகாய்கறி எடுக்கவும், நீர்பாய்ச்சவும்  செல்கின்றனர்.இந்நிலையில் தற்போது சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைக்கூட்டம்  குட்டிகளுடன்  முகாமிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, தேயிலை தோட்டம், மலைக்காய்கறிகள் விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்….

The post கோத்தகிரியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Gookaltherai ,Kotagiri Mazakal ,Kotagiri… ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்