×

போர் மூள வாய்ப்பில்லை என்றாலும் இந்தியா - பாக். இடையே மோதல் ஏற்படும் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம், உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு குறித்த தனது ஆண்டு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில், ‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு கடந்த காலங்களை காட்டிலும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே போர் சாத்தியமில்லை.

எனினும், பதற்றங்கள் அதிகரிப்பது இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதற்கான அபாயத்தை குறிக்கின்றன.  காஷ்மீரில் வன்முறையால் ஏற்படும் அமைதியின்மை அல்லது இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதற்றமானது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்துகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : India ,Pakistan ,US , Although war is unlikely, India-Pakistan. Risk of conflict between: US intelligence alert
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!