‘மீனாட்சி அம்மனிடம் வேண்டிட்டு வர்ரேன் ஸ்டாலின்தான் முதல்வரா வருவார்’: பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்த மூதாட்டி

மதுரை:  மீனாட்சி அம்மனிடம் வேண்டிட்டுதான் வர்ரேன். ஸ்டாலின்தான் முதலமைச்சர் என மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மூதாட்டி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது 65 வயது மூதாட்டி ஒருவர், பொன்.ராதாகிருஷ்ணனை பார்த்து வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து மூதாட்டி, ”மீனாட்சி அம்மனிடம் வேண்டிட்டுதான் வரேன்.

ஸ்டாலின்தான் முதலமைச்சர்” எனக்கூற, உடனே பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘அம்மனிடம் வேண்டுங்கள்’’ என்றார்.  உடனே அந்த மூதாட்டி விடாமல், ‘‘‘‘அம்மனிடம் வேண்டிட்டுதான் இப்ப வெளியே வர்ரேன். ஸ்டாலின்தான் முதல்வரா வருவார்’’ என மீண்டும் கூற அதிர்ச்சி அடைந்த பொன்.ராதாகிருஷ்ணன், மூதாட்டியை வணங்கி விட்டு காரில் ஏறிச் சென்றார். இது அவருக்கு மட்டுமல்ல. அங்கிருந்த பாஜ கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories:

>