போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஐஐடி வடிவமைத்துள்ள ‘விமான டாக்சி’: சென்னையில்விரைவில் பறக்க வைக்க முயற்சி; பேராசிரியர் தகவல்

சென்னை: சென்னையின் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வானத்தில் பறந்து செல்லும் வகையில் விமான டாக்சி ஒன்றை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. சென்னை ஐஐடியின் செயற்கை முறை தொழில் நுட்பப் பிரிவு சார்பில் பறக்கும் கார் ஒன்றை வடிவமைத்து உள்னர். இது குறித்து சென்னை ஐஐடியின் பேராசிரியர் சத்ய சக்ரவர்த்தி கூறியதாவது: விமான டாக்சி லித்தியம் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து நேராக தரையில் இறங்கவும், தரையில் இருந்து அப்படியே மேலே எழும்பும். இதை, ஒரு பைலட் மட்டும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை 0.5 கிமீ முதல் 2 கிமீ தூரம் வரை ஒரு மணி நேரத்தில் 200 கிமீ வேகத்தில் இயக்கலாம். ஒரு முறை பேட்டரி சார்ஜ் ஏற்றப்பட்ட பிறகு 200 கிமீ சுற்றளவில் உள்ள தூரத்தில் அமைந்துள்ள இடங்களுக்கு 10முதல் 20 முறை சென்று வர முடியும். சாதாரண டாக்சி கார்களுக்கு செலவிடுவதை விட ஒன்றரை முதல் இரண்டு மடங்கு வரை செலவாகும். இதன் பெரிய பிளஸ் பாயின்ட் வாகன நெரில் இல்லாமல் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இறங்க முடியும்.அதாவது 10 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் சென்றடைய முடியும். அதிக அளவில் இதுபோன்ற டாக்சிகளை உருவாக்கிவிட்டால் கட்டணத்தை குறைக்கலாம் என்றார். உடன், ஐஐடியின் மற்றொரு பேராசிரியர் பிரஞால் மேத்தா இருந்தார்.

Related Stories:

>