கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்: ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு !

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில சுகாதாரத்துறை, யூனியன் பிரதேச ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக தாக்கி வருகிறது. தினந்தோறும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவது நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 11-ந் தேதி (நேற்று) முதல் 14-ந் தேதி வரையில் 4 நாட்கள் தொடர்ந்து தடுப்பூசி திருவிழா கொண்டாட பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நாட்களில் நாடு முழுவதும் தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசிசெலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில சுகாதாரத்துறை,  யூனியன் பிரதேச ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதில், கொரோனா பரவல், நாட்டு நிலைமை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொடங்கியுள்ள கொரோனா தடுப்பூசி திருவிழா, அதில் மேலும் தடுப்பூசி மையங்கள் விரிவுபடுத்தப்பட்டதாகவும், புதிய தடுப்பூசி மையங்களும் வந்ததாகவும் அவர் கூறினார். சமூக நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்ய ஆளுநர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>