×

அரசு பள்ளிகளில் வினாடி வினா போட்டி நடத்த ₹9.22 கோடி ஒதுக்கீடு சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை

வேலூர், மார்ச் 26: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மூலம் வினாடி வினா போட்டி நடத்திட தேவையான பேப்பர் வாங்க ₹9.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர் இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-23ம் ஆண்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் வாயிலாக வினாடி வினா போட்டி நடத்திட தேவையான பேப்பர்கள்(ஏ4 சீட்) வாங்க நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.இதற்கென எமிஸ் தரவு தளத்தில் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகுப்பு மற்றும் பள்ளி வாரியாக வினாத்தாள்கள் அச்சிட தேவையான பேப்பர் மற்றும் அதற்கு தேவைப்படும் நிதியும் கணக்கிடப்பட்டு மாவட்டம் வாரியாக நிதி விடுவிக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பள்ளி வாரியாக நிதியினை விடுவித்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் உரிய விதிமுறைகளை பின்பற்றி பேப்பர்கள் வாங்கவும், பயன்பாட்டு விவரங்களை உரிய பதிவேட்டில் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்கள்(லட்சத்தில்): அரியலூர்- ₹12.97, செங்கல்பட்டு- ₹27.94. சென்னை- ₹36.46, கோவை- ₹31.19, கடலூர்- ₹35.30, தருமபுரி- ₹34.31, திண்டுக்கல்- ₹23.80, ஈரோடு- ₹30.06, கள்ளக்குறிச்சி- ₹32.83, காஞ்சிபுரம்- ₹18.32, கன்னியாகுமரி- ₹14.17, கரூர்- ₹14.95, கிருஷ்ணகிரி- ₹38.61, மதுரை- ₹28.54, மயிலாடுதுறை- ₹10.54, நாகப்பட்டினம்- ₹11.09, நாமக்கல்- ₹24.27, பெரம்பலூர்- ₹9.99, புதுக்கோட்டை- ₹34.10, ராமநாதபுரம்- ₹14.91, ராணிப்பேட்டை- ₹19.97, சேலம்- ₹54.13, சிவகங்கை- ₹16.22, தென்காசி- ₹16.61, தஞ்சாவூர்- ₹27.73, நீலகிரி- ₹6.27, தேனி- ₹13.43, தூத்துக்குடி- ₹11.93, திருச்சி- ₹29.20, திருநெல்வேலி ₹13.84, திருப்பூர்- ₹32.38, திருப்பத்தூர்- ₹16.81, திருவள்ளூர்- ₹34.78, திருவண்ணாமலை- ₹49.41, திருவாரூர்- ₹16.25, வேலூர்- ₹21.50, விழுப்புரம்- ₹37.23, விருதுநகர்- ₹20.15 என மொத்தம் ₹9 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரத்து 740 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post அரசு பள்ளிகளில் வினாடி வினா போட்டி நடத்த ₹9.22 கோடி ஒதுக்கீடு சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு...